கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ளது எலச்சிபாளையம் கிராமம். இங்கிருந்து ஈரோடு மாவட்டம் ஈங்கூர் வரை உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் விவசாயிகள் நிலத்தில் செல்வதால் அவர்களுக்கு இழப்பீடு தருவதாக மின்சார வாரியம் தெரிவித்து அதற்கான விலை நிர்ணயத்தையும் செய்துள்ளது. ஆனால் இதுவரை அதற்கான இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில், எலச்சிபாளையத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் புதிதாக உயர்மின் கோபுரத்தை அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்து போலீஸ் பாதுகாப்புடன் அமைக்க முற்பட்டுள்ளனர்‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR