டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கம்!
டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக டெல்லி (New Delhi) எல்லைகளில் போராடம் (Farmers Protest) நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ALSO READ | Farmers Protest: 1000km சைக்கிளில் பயணித்து டில்லி போராட்டத்திற்கு வந்த விவசாயி
மத்திய அரசுடன் (Central Government) கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே நடந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளன. விவசாய சட்டங்களை திரும்பபெற வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு பிடிவாதமாக தெரிவித்துள்ளது. மாறாக சட்டத்தில் உள பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது. ஆனால், 3 வேளாண் (Farm Bills) சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் பிடிவாதமாக உள்ளது.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
ALSO READ | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR