பிரதமர் மோடி விவசாயிகளுக்கு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியாக வழங்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சிப்பதை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம்  அலகுமலை பிரிவில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான மாநாடாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழா பேருரையாற்ற உள்ளார். மேலும் மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களும் திரளாக பங்கேற்று வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்


சென்னையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக ஆட்சிக்கு வந்தும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறியும் விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாகவும் கூறி மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியும் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்லடம் அருகே பொங்கலூர் அவிநாசிபாளையம் அலகுமலை பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு ஏற்கனவே தயாராக இருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்துவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும், தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.  இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல்வேறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மீனவரணி சார்பில் பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை 400 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு 3179 மீனவர்கள் இலங்கை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் தற்போது வரை 150 படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இலங்கை நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது. 


இந்த நிலையில் இருநாட்டுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு இரு நாட்டு அரசினரும் மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு அளிக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. இதனை பாஜக அரசு சரிவர வழிமுறைப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் பெரியதாழை கடற்கரை கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ