சென்னை: விவசாயிகள் போராட்டம் வாபஸ் பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும 5-ம் தேதி மாநிலம் தழுவி மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.


இது தொடர்பாக சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:


முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியபோது எங்கள் கோரிக்கை பரிசிலிப்பதாக கூறியுள்ளார். விவசாயிகள் பிரச்சினை குறித்து 5-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இதனால் 5-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அவர் கூறினார்.


முன்னதாக பி.ஆர். பாண்டியன், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பு கூட விடவில்லை. காவிரி மேலாண்வாரியம் அமைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும். வறட்சி மாநிலம் அறிவிப்பு என்பது சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கை. மழை சதவீத அடிப்படையில் மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். இதில் காலம் கடத்துவது சரியல்ல. 


அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிறது. தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. நீர் நிலை ஆதாரங்கள் குறைந்து விட்டன. குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட வேண்டும். குடிநீர் பிரச்சனைகள் சமாளிக்கப்பட வேண்டும். 


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி வரும் ஜனவரி 5-ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. இதற்கு திமுகவின் ஆதரவை கேட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம் என அவர் கூறி இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.