12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிச்சிறுமியின் கருமுட்டைகளை வற்புறுத்தலின் பெயரில் பறித்து விற்ற தந்தை உட்பட 3 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் கருமுட்டைகள் சட்டத்துக்கு புறம்பாக தனியார் மருத்துவமனைக்கு விற்கப்பட்டதாக தகவல் கிடைத்ததின் பெயரில் போலீஸார் சிறுமியின் தந்தை உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை சையத் அலி, தந்தையின் கள்ளக்காதலி, மற்றும் அவரது தோழியும் மருத்துவமனை புரோக்கருமான மாலதி ஆகிய 3 பேரும் கூட்டாக பணிபுரிந்து 12 வயது சிறுமியை இந்த குற்றச்செயலுக்கு பலி ஆடு ஆக்கியுள்ளனர்.
மேலும் படிக்க | Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி
முதற்கட்டமாக இவர்கள் மூவரும் சேர்ந்து 12 வயதாகிய அச்சிறுமிக்கு சட்டத்துக்கு புறம்பாக 20 வயது எனக்கூறி வேறொரு பெயரில் போலி ஆதார் கார்டை உருவாக்கியுள்ளனர். பின்னர் மாலதி பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் கருதரிப்பு மருத்துவமனைகளுக்கு அச்சிறுமியை பரிச்சையம் செய்துள்ளார். பின்னர் பொய் உரைத்து சிறுமியின் கருமுட்டைகளை அந்த மருத்துவமனைகளுக்கு விற்றதாக தெரிகிறது.
இதுவரை தனியார் கருதரிப்பு மையத்திற்கு கருமுட்டை தானம் என்ற பெயரில், அச்சிறுமியிடம் இருந்து 15 -20 முறை கருமுட்டை எடுக்கப்பட்டு பணத்திற்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு கருமுட்டைக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் தொகையை மருத்துவமனை அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் புரோக்கர் மாலதிக்கு ரூ.5000 பணம் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு தனக்கு நெருங்கியவர்களே தன்னை உடல், மன ரீதியாக துன்புறுத்துவதை பொருத்துக்கொள்ளாத அச்சிறுமி, தனது தாயை விட்டு தூரத்து உறவினர் வீட்டிற்கு தப்பிச்சென்றுள்ளார். மேலும் அந்த உறவினர்களிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பெயரில் போலீஸார் சிறுமியின் தந்தை சையத் அலி, அவரது காதலி, புரோக்கர் மாலதி ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையின் அடைத்தனர்.
மேலும் படிக்க | குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்கும் வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR