Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி

Aadhaar Card Check: ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இன்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 03:14 PM IST
  • ஆதார் அட்டை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது
  • ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது.
  • யுஐடிஏஐ ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிதாகச் சரிபார்க்க சில நுணுக்கங்களை வெளியிட்டுள்ளது.
Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி title=

ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது: நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம், நமது வாலெட், பர்ஸ் ஆகியவை இல்லாமல் செல்வதில்லை. பெர்ரும்பாலும், பர்சில் பணத்துடன், அடையாளச் சான்றும் இருக்கும். 

இந்த அடையாளச் சான்று பொதுவாக நமது ஆதார் அட்டையாகவே இருக்கும். நமது வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும்போதும், அலுவலகத்தில் பணியமர்த்தும்போதும் மற்றும் பல இடங்களிலும் ஆதார் அட்டை செக் செய்யப்படுகிறது. ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இன்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஆதார் அட்டை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது

நமது அடையாளச் சான்றாக, ஆதார் அட்டை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமாகும். பல்வேறு இடங்களில் வெரிஃபிகேஷனுடன் ஆதார் அட்டை மூலம் ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். 

அலுவலகத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கும்போது, ​​வீட்டில் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது, வீட்டு டிரைவரை நியமிக்கும்போது, வீடு வாடகைக்கு விடும்போது என பல இடங்களில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிதாகச் சரிபார்க்க சில நுணுக்கங்களை வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க ஆஃப்லைன் வழி

- ஆதார் அட்டையை ஆஃப்லைனில் சரிபார்க்க, உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் க்யூஆர் ஸ்கேனர் என்று பெயரிடப்பட்ட ஒரு செயலியைப் பதிவிறக்க வேண்டும். 

- இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். 

- ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் ஒரு க்யூஆர் குறியீடு உள்ளது. 

- இந்த குறியீட்டில் நபரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இருக்கும். 

- இந்த க்யூஆர் குறியீட்டை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்து மூலம் ஆதார் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

ஆதார் அட்டையை ஆன்லைனிலும் சரிபார்க்கலாம்

- உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய விரும்பாவிட்டாலும், ஆதார் அட்டையை சரிபார்க்கலாம்.

- ஆன்லைனில் சரிபார்க்க, நீங்கள் சரிபார்க்க விரும்பும் ஆதார் அட்டையின் எண்ணை மட்டுமே உங்களுடன் வைத்திருக்க வேண்டும். 

- இந்த 'https://myaadhaar.uidai.gov.in/verifyAadhar' என்ற இணைப்பை உங்கள் தொலைபேசியிலோ அல்லது வேறு ஏதேனும் சாதனத்திலோ திறக்க வேண்டும்.

- திரையில் எந்த விண்டோ திறந்தாலும், ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். 

- இதன் மூலம், நபரின் வயது, பாலினம், அவர் வசிக்கும் மாநிலம் மற்றும் அவரது மொபைல் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்களை நீங்கள் சரிபார்க்க முடியும்.

மேலும் படிக்க | ITR e-Verification: வருமான வரி தாக்கல் பற்றிய முக்கிய தகவல், UIDAI அளித்த எளிய வழிமுறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News