தமிழக ரேஷன் கடைகளில் தரமற்ற அரசி விநியோகம் - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மனித பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாத தரமற்ற அரிசிகள் ரேசன் கடைகளில் விநியோகம் செய்வதாக இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளில், லட்சக்கணக்கான ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச அரசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசிகள் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மண்டலங்களில் உள்ள கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த கிடங்குகளில் ஆய்வு செய்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள், மனித பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாத அரிசிகள் இருப்பதைக் ஆய்வில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக TNCSC -க்கு 12.05.2022 தேதியில் FCI எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், உபயோகப்படுத்த முடியாத BRL அரிசியை, கிடங்குகளில் பெற்ற அதிகாரிகள் மீதும் அந்த அரிசியை சப்ளை செய்த அரவை ஆலைகள் 1) M/s Natchiammal Mill, Manapparai, (Trichy Region), 2) Kannan Agencies, Kumbakonam, M/5 Mahanbava MRM, Saliyamangalam (Thanjaur Region) மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், TNCSC நிர்வாக இயக்குனர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த சம்பந்தப்பட்ட அரிசி ஆலைகளுக்கு தொடர்ந்து அரவை செய்ய நெல் வழங்கிவருவதையும் உணவுக் கழகத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மீண்டும் 06.07.2022 அன்று தேதியிட்ட கடிதத்தில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அரிசி ஆலைகளை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் TNCSC நிர்வாக இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், அந்த பரிந்துரை மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கருப்பு நிறத்திலான இந்த அரிசிகளை தொடர்ந்து ரேசன் கடைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வருவது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அரிசி ஆலைகளை கருப்பு பட்டியலில் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் : ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ