சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஐந்தாவது நினைவு நாள் இன்று. அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை அனைத்து தரப்பினரும் மறைந்த அம்மா ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Jayalalithaa),  75 நாள் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார்.



"அம்மா" இல்லாததால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை விவரிக்க முடியாது; யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பது கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, அதிமுக தலைவர்களின் கருத்தாகவும் இருக்கிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவியான ஜெயலலிதா, துணிச்சலையும் வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தவர். 


மக்களால் நான்; மக்களுக்காக நான் என்று முழங்கிய ஜெயலலிதாவின் நினைவிடத்தில், கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



ஜெயலலிதாவின் வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் அவ்வப்போது வந்துக் கொண்டேயிருந்தது. ஆனால், மலை போல் தடைகள் வந்தாலும், அவற்றை மடு போல் உடைத்து தனது புத்திசாலித்தனம், உறுதி மற்றும் கடும் உழைப்பால் உயர்ந்த உதாரணப் பெண்மணி ஜெயலலிதா.  அவர் கடந்துவந்தப் பாதை கரடு முரடாக இருந்தாலும், அதை வெற்றி கொண்ட இரும்புப் பெண்மணி தமிழகத்தின் தங்கத்தாரகை செல்வி. ஜெ.ஜெயலலிதா. 


5 முறை முதலமைச்சராக மாநிலத்தை ஆண்ட அம்மாவுக்காக அ.இ.அ.தி.மு.க-வின் (AIADMK) ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலயம் (Temple) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  


அம்மாவை தெய்வமாகக் கருதி வணங்குகின்ற கட்சியின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஜெயலலிதாவை குல தெய்வமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயத்தில் ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலையும்,  கட்சியின் நிறுவனர் எம்,ஜி,ஆரின் (MGR) 6 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஜெயலலிதா இருந்தபோது மட்டுமா அவரது ஆளுமை வெளிப்பட்டது? அவர் இல்லாத இந்த ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு சம்பவத்திலும் அவரது ஆளுமை வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றன. அது கட்சியின் தலைமை யாருக்கு என்பதாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவின் ஆருயிர் தோழிக்கு கட்சியில் என்ன இடம் என்ற விவாதமாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை அவரது வெற்றிடம் உணர்த்துகிறது.


அதிலும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உட்கட்சி தேர்தல் தொடர்பான பூசல்களும், அடிதடிகளும் ஜெயலலிதா ஏற்படுத்திச் சென்ற வெற்றிடத்தை பூதாகரமாக்கி காட்டுகின்றன.


அ.ம.மு.கவின் தினகரனும், ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலாவும் (Sasikala, Close friend of Jayalalitha), வெற்றிடத்தை உருவாக்கிச் சென்ற முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இதற்கு முன்பு, முதல் முறையாக அக்டோபர் 16ஆம் தேதி நினைவிடம் சென்ற சசிகலா அங்கு கண்ணீர் விட்டு அழுததும் குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அதிமுக அரசுடமையாக்கியது. ஆனால், ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கட்சியினருக்கு தற்போது வேதனை கொடுக்கும் இடமாக மாறிவிட்டது. ஜெயலலிதாவின் சட்ட வாரிசான உறவினர்களுக்கு தான் சொந்தம் என நீதிமன்றம் குட்டு வைத்துள்ள நிலையில், மேல்முறையீடு தாக்கல் என அதிமுகவினர் அனைவரும் தங்கள் அம்மாவின் வெற்றிடத்தை உணர்ந்திருக்கின்றனர்.


ALSO READ | ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR