தமிழகம் முழுவதும் இருக்கும் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். 18 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். 800-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது. சம்பளம்: ரூ.15900-50400. 


தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்டிருக்கும் ஊர்களின் அரசு இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலகங்களுக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.



குறிப்பு: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை (ENVELOPE) இணைத்து அனுப்ப வேண்டும். 


அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.