கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்ததால் இதுவரை 9 பேர் இறந்தனர்,. மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை: தமிழக கடலூர் (Cuddalore) மாவட்டம் காட்டுமன்னார்கோயிலுக்கு (Kattumannarkoil) அருகில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. இங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெண்கள் உள்பட 9 பேர் இறந்தனர். அதே நேரத்தில், மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சாலை தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் (Firecrackers) வெள்ளிக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில், உரத்த வெடி விபத்து காரணமாக முழுப் பகுதியும் பீதிக்குள்ளானது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
விபத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அதே நேரத்தில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ALSO READ |
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தின் அருகே தீ விபத்து; சேதம் எதுவும் இல்லை
108 ஆம்புலன்சில் திடீர் தீ விபத்து! கரூரில் பரபரப்பு!
இறந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.