புது டெல்லி: டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் அருகே அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) வரவேற்பு பகுதியில் உள்ள கட்டடத்தின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டது எனக் எஸ்.பி.ஜி. குழுவினர் தெரிவித்தனர். சிறிய அளவிலான தீ விபத்து என்பதால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரதமர் குடியிருப்பு பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.
There was a minor fire at 9, Lok Kalyan Marg caused by a short circuit. This was not in PM’s residential or office area but in the SPG reception area of the LKM complex.
The fire is very much under control now.
— PMO India (@PMOIndia) December 30, 2019
சிறிய தீ விபத்து என்பதால் பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்து இரவு 7:20 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இந்த தீ விபத்தல் பிரதமரின் குடியிருப்பு அல்லது அலுவலக பகுதிக்கு பாதிப்பு இல்லை. ஆனால் லோக் கல்யாண் மார்க் வளாகத்தின் சிறப்பு பாதுகாப்பு குழு வரவேற்பு பகுதியில் இருந்தது என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
தீ விபத்து பற்றிய தகவலை பெற்றதும் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் தீ ஏற்கனவே அனைக்கப்பட்டதால், தீயணைப்பு வாகனங்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை.