சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிபத்து!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீரென ஏற்பட்ட தீவிப்பத்து காரணமகா அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீரென ஏற்பட்ட தீவிப்பத்து காரணமகா அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது!
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 8.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பொதுமேலாளர் அலுவலகத்தின் 4-வது மாடியில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷயமறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர், எனினும் தீ அருகாமை இடங்களுக்கும் பரவியதால் சம்பவயிடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
கடும் போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என மீட்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குளிர்சாதன பெட்டியை அணைக்காமல் சென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.