சென்னை: TN Assembly Elections 2021: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியின் முதல் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கு முன்பே உறுதியாகிவிட்டாலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எதிர்பார்ப்புகளுக்கும், நிதரசனத்திற்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருந்தது.



திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுடனும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் நேற்று தொகுதிப் பங்கீடு குறித்த கலந்தாலோசனைகளை மேற்கொண்டனர்.  


Also Read | TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை


ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு கட்சிகளுமே திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் மமகவுக்கு  5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், தங்களுக்கு பலனில்லாத  ஒரு மறுத்துவிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. நான்கில் ஒரு தொகுக்தியில் மட்டுமே மமக வெற்றி பெற்றது. 


Also Read | அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா


அதேபோல் கடந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 5 தொகுதிகளை பங்கீட்டில் பெற்றது. கடையநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR