ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்!!
முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டப் பிறகு இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் அவரது வசம் இருந்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டப் பிறகு இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் அவரது வசம் இருந்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் துறைகள் தொடர்பான கோப்புகளை பன்னீர்செல்வம் பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 1 மணிநேரம் அமைச்சர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.