புழல் சிறையில் முதல் வகுப்பு சிறை கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ளவும், சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் அனுமதி உண்டு என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுதினார். இந்நிகழ்வின் போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செய்தனர். 


இதன் பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது... 


முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ளவும், தங்களது சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் அனுமதி உண்டு. சிறைக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநர் நல்ல முடிவினை எடுப்பார். தமிழர்களின் உணர்வை புரிந்துக்கொண்டு முடிவினை அறிவிப்பார்.


புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் H ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.