சசிகலாவை சந்தித்து ஆலோசனை செய்த பின் தான் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக-விலிருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. மேலும் நான் நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். 


அமைச்சர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட தான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறினார்.


கட்சியில் சிலருக்க ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். 


நான் ராஜினாமா செய்ய மாட்டேன். பொதுச் செயலாளர் என்னை நீக்கட்டும். சசிகலாவுடன் ஆலோசித்த பின் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.