காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. முதல் மின்சார பேருந்தின் சாதனை பயணம் வெற்றி!

EV Bus Tamilnadu | காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை மின்சார பேருந்து ஒன்று முதன்முறையாக வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து அசத்தியுள்ளது.
NueGo EV Bus | இந்தியா மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கூட மின்சார பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில் முதன்முறையாக காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை மின்சார பேருந்து எந்த சிக்கலும் இல்லாமல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து அசத்தியுள்ளது. ஏனென்றால் கார் மற்றும் இருசக்கர மின்சார வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட லிமிட் மட்டுமே ஒருமுறை சார்ஜரில் பயணிக்க முடியும். அதன்பிறகு அந்த வாகனங்களை சார்ஜ் செய்ய வேண்டும். இப்போது, தனியார் பேருந்திலும் அந்த வசதி வந்துள்ளது. NueGo நிறுவனத்தின் (E-K2K) பேருந்து தான் இந்த சாதனை பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!
இந்த பயணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகரங்களின் வழியே பயணம் செய்த இந்த எலக்டிரிக் சொகுசு பேருந்து காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரியில் முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. இந்த பேருந்தின் முதல் வெற்றிகரமான பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய எம்பி விஜய் வசந்த், “NueGoவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணம் உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சி. 200 டவுன்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்லும் போது, 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது என பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய விஜய் வசந்த் எம்பி, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பசுமை இல்ல வாயு உமிழ்வு இல்லாத பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த பேருந்து பயணம் இப்போது நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. மின்சார பேருந்துகளின் இயக்கம் பூமிக்கும் மக்களுக்கும் பெரும் நன்மைகளை சேர்க்கும். மின்சார பேருந்துகளின் திறனையும் NueGo நிறுவனத்தின் இந்த பேருந்து வெளிக்காட்டியுள்ளது என கூறினார். NueGoவின் மின்சார பேருந்து முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். ஜம்மு ஸ்மார்ட் சிட்டியின் CEO டாக்டர் தேவன்ஷ் யாதவ் தான் இந்த பேருந்தின் முதல் பயணத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் தொடங்கி வைத்தார்.
NueGo E-K2K பேருந்தின் வசதிகள்
இந்த பேருந்தில் பெண் பயணிகளுக்காக பிரத்யேக 24x7 ஹெல்ப்லைன் வசதி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யுமபோது பெண்களுக்கான பிங்க் இருக்கையை தேர்வு செய்து கொள்ளும் வசதி மற்றும் CCTV கண்காணிப்பு, GPS லைவ் டிராக்கிங் ஆகியவையும் உள்ளது. டிரைவர் ப்ரீத் அனலைசர் சோதனைகள் மற்றும் மணிக்கு 80 கி.மீ.ஸ்பீட் லாக் செட் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இத்தனை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மின்சார பேருந்தும் இதுதான்.
மேலும் படிக்க | Thirumavalavan | எல் முருகன் ஒரு RSS சங்கி, அருந்ததியர் அல்ல - திருமா விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ