உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!

உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Oct 21, 2024, 08:24 AM IST
  • நாங்க எல்லாம் தெய்வீத்தை நம்பக்கூடியவர்கள்.
  • கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடியவர்கள்.
  • முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்! title=

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர். செ.ராஜீ ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், திமுகவின் சரித்திரம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாது. கருணாநிதியின் மகன் என்பதால் தான் ராஜகுமாரனாக, இளைய குமாரனாக உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முதல்வர் பதவியை பிச்சை போட்டவர் எம்.ஜீ.ஆர். 2026ல் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மூடுவிழா நடத்தி விடுவார் என்று மகாத்மா காந்தி பேரன் டிடிவி தினகரன் சொல்கிறார். அதிமுகவிற்கு அவருக்கும் என்ன சம்பந்தம், யார் இந்த டி.டி.வி. சசிகலா, ஜெயலலிதாவி;ற்கு உதவியாளராக வந்த பிறகு தான் திவாகரன்,டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் வந்தனர்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல இவர்களை பார்த்தால் ஜெயலலிதாவை பார்க்க முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும், அமைச்சராக முடியும் என்ற நிலையை உருவாக்கி தமிழகம் முழுவதும் தவறான வழியில் சொத்து சேர்த்தனர். இதை தவிர இவர்களுக்கு அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் 20ரூபாய் நோட் கொடுத்து வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராகி விடலாம் என்று டி.டி.வி தினகரன் நினைத்து இருந்தார். ஆனால் அரசன் அன்றே கொல்வார், தெய்வம் நின்றும் கொல்லும் எனபதற்கு அவருக்கு நடந்து விட்டது. டி.டி.வி.தினகரன் மூலமாக முதல்வரனவர் ஓ.பன்னீர்செல்வம், 11எம்.எல்.ஏக்களை வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவின் அணிகள் இணைப்பு என்பதோ, ஓபிஎஸ்க்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்ததோ எனக்கோ, முன்னாள் அமைச்சர் கடம்பூர்.ராஜீவுக்கு தெரியாது. ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற 3 மாதத்தில் தனது சுயரூபத்தினை காண்பித்தார்.

ஒரு உறையில் 2 கத்தி இருக்க முடியாது மந்திரிகுமாரி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம். ஓ.பி.எஸ். குரூப் அரசியல் ஆரம்பித்து பதவிகளை கேட்டு நச்சரிக்க தொடங்கி விட்டார். இதனை தொடர்ந்து கட்சிக்கு ஒன்றை தலைமை வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் அனைவரும் முடிவு எடுத்தனர். ஆனால் ஓ.பி.எஸ் இதை ஏற்க மறுத்தார். அப்போது நான் தான் பிரிட்டினியா பிஸ்கெட் மூலம் ஹார்லிக்ஸ் பாட்டீல்களில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் இருவரும் பெயரை எழுதி வைத்து வாக்கெடுப்பு நடத்தி ஒற்றை தலைமை யார் என்று முடிவு எடுத்து விடலாம் என்று கூறினேன். அதை ஏற்கவில்லை. பின்னர் முறைப்படி கூட்டங்கள் நடத்தப்பட்டு ஓ.பி.எஸ்., டி.டிவி தினகரன் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். 2026ல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ் கூறுகிறார்.

மேலும் துரோகிகள் துரோகத்தை செய்ய கூடாது என்று கூறுகிறார். யார் துரோகி, சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வத்தினிடம் ராஜினமா கடிதம் வாங்கியவர் டி.டி.வி. தினகரன். அப்ப யார் துரோகி? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை எதிர்த்து ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் டி.டிவி.தினகரன் இருவரும் போட்டி போட்டு மண்ணைக்கவ்வினர். அதிமுகவிற்கு எதிராக இவர்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளார். இதற்கு பிறகும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் நினைக்கின்றனர். திமுக ஆட்சியி;ல் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என அனைத்தையும் எதிர்;த்து அதிமுகவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் போராடி வருகின்றனர்.

நாங்க எல்லாம் தெய்வீத்தை நம்பக்கூடியவர்கள், கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடியவர்கள், நாடகமாடி திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அனைத்து குடும்பத்தலைவிக்கும் ரூ.1000ம் வழங்குவதாக திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 3 ஆண்டுகள் கொடுக்கவில்லை, தொடர்ந்து மக்கள், எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியதும் 1000ரூபாய் தமிழக அரசு வழங்கியது. கொடுக்க வைத்த பெருமை எங்களை தான் சேரூம், ஆனால் எல்லா குடும்பத்திற்கும் ரூ.1000 கிடைக்கவி;ல்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதும் கணக்கெடுப்பு நடந்து கொண்டு இருப்பதாகவும்,மீதி உள்ளவர்களுக்கு கிடைக்கும் என்று கூறினார். நெல்லையில் அல்வா, கோவில்பட்டியில் கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோ கிடைக்கும், ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து உதயநிதி ஸ்டாலின் அல்வா கொடுத்து கொண்டு இருக்கிறார். உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்த பிறகு தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளனர் என்றார்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News