முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த வந்தனா கோபிகுமாருக்கு பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை விருதினை பெறவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தனா கோபிகுமார் மற்றும் வைஷ்ணவி ஜெயக்குமார் இருவரும் இணைந்து 1993-ம் ஆண்டு பான்யன் எனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ ரீதியான தீர்வையும் வாழ்வாதாரத்தையும் பான்யன் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.


இந்நிலையில், பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை விருது வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மார்ச் 21-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. விருதுடன் 63,62,500 ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.


25 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிந்து வருவதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பென் நர்சிங் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா கோபிகுமார் பென் நர்சிங் விருது பெற்றுள்ளதற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கனிமொழி, ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.