State Honor For Organ Donar: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்தவர், வடிவேலு. சாலை விபத்தில் சிக்கிய இவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரின் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் முதன்முறை...


இந்நிலையில், இந்தியாவிலேயே முதன் முறையாக வடிவேலுவின் இறுதிச்சடங்கு தமிழக அரசு அறிவித்தபடி அரசு மரியாதை உடன் நடைபெற உள்ளது. இன்று அவரது பூத உடலானது அரசு மரியாதை உடன் அவரது சொந்த ஊரான சின்னமனூரில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ், அரசியல் கட்சியினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 


மேலும் படிக்க | பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


விழிப்புணர்வு


இந்நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையில் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.


இறுதி அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மூளைச்சாவு அடைந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த அவரது மனைவி, தாய், சகோதரியின் தியாக உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். செப். 23 ஆம் தேதி உடல் உறுப்பு தான தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் அந்த அறிவிப்பை வெளியிட்டார். 



இனிமேல் உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தார். மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் அல்லது அந்த நிலையில் உள்ள அதிகாரிகள் மரியாதை அளிப்பார்கள்" என்றும் அவர் அறிவித்தார்.


தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு சில நாட்கள் முன்பாக அறிவித்திருந்தது.


முக ஸ்டாலின் பதிவு 


இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த செப். 23ஆம் தேதி அவரது 'X' பக்கத்தில் போட்ட பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. 


குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த பெரும் முன்னெடுப்பு ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் பாராடுத் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என திமுக சொல்லுமா?-சீமான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ