முழுஅடைப்பு காலத்தில் மீன்பிடி படகுகள், மாவட்டத்திற்குள் மற்றும் வெளியே செல்ல எர்ணாகுளம் மீன்வள துணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளில் தமிழ்நாட்டிலிருந்து எர்ணாகுளத்திற்கு மக்கள் வருவதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இந்த உத்தரவின் படி, பிற மாநிலங்களிலிருந்து இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மாவட்டத்தில் தரையிறங்கும் இடங்கள் அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடுவது தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து மீன்வள துணை இயக்குனர் தெரிவிக்கையில்., "எந்தவொரு கேரளரும், அத்தகைய படகுகளில் வந்து மாவட்டத்தில் இறங்க விரும்பினால், முதலில் மீன்வளத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


மற்ற மாநிலங்களைச் சேர்ந்த படகுகள் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்காக இங்கு நிறுத்த விரும்புவதால், வைபீன் மீன்வள நிலையத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். "இதுபோன்ற படகுகள் ஒரு மீன்வளத் துறை அதிகாரி முன்னிலையில் எரிபொருள் நிரப்புவதை முடித்து, விரைவில் கரையை விட்டு வெளியேற வேண்டும்" என்று மார்ச் 24-ஆம் தேதிக்கு முன்னர் புறப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த படகுகள் உத்தியோகபூர்வ அனுமதி பெற்ற பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய முடியும் என்றும் இந்த அறிவிப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.


நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் அறிமுகமான மாநிலம் கேரளா தான். கொரோனாவை கட்டுபடுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மற்ற மாநிலங்கள் முன்னெடுப்பதற்கு முன்னதாக கேரளா முன்னெடுத்து வருகிறது. தற்போது கேரளாவில் கொரோனா பரவுதல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பிற மாநிலத்தில் இருந்து தொற்று பரவுதலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சாலை போக்குவரத்துடன் தற்போது நீர்வழி போக்குவரத்திற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


கேரளாவை பொறுத்தவரையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 314-ஆக உள்ளது. மேலும் 55 பேர் இதுவரை சிகிச்சை மூலம் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளனர், மற்றும் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழகத்தில் 571 வழக்குகள் (5 இறப்பு, 8 மீட்பு), கர்நாடகத்தில் 151 (12 மீட்பு, 4 இறப்பு) வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தற்போது மாநில எல்லை கட்டுபாட்டில் கேரளா அரசு தீவிரம் காட்டி வருகிறது.