தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் மேற்கு பருவமழை மேற்கு இந்திய பகுதிகளில் மீண்டும் வலுப்பெற்று வருகிறது.
கேராளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை நேற்று காலை முதல் குறைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தற்போது பெய்து வரும் மழையின் வலு இழக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்..!


கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 


மேலும், தென்மேற்கு திசையில் இருந்து 45 - 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.