கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 


சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று புவியரசன் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார். 


இந்நிலையில், தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. அதன் படி, தூத்துக்குடி: கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவிப்பு. 


சென்னை: சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 


காஞ்சிபுரம்‌: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும்  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.  


திருவள்ளூர்: தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு