திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார். திருப்பூர்,கோவை, நீலகிரி,தேனி,ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூணார்,தேவிகுளம்,கோவில் கடவு பகுதிகளிலும் கன பருவமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான தேனாறு, சின்னாறு,பாம்பாற்றில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடி. மதியம் 1 மணி நிலவரப்படி நீர் வரத்து 7600 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 88.23 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், அமராவதி அணையில் இருந்து  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 10600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நீலகிரி : காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை உயிருடன் மீட்கும் பரபரப்பு காட்சி
 
அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். நீர்வரத்து நிலவரம் குறித்து பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்தால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  


மேலும் படிக்க | அமர்நாத் மேக வெடிப்பு: 16 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ