மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழுகொள்ளளவை எட்டிய நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அமராவதி அணையில் தண்ணீர் திறகப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


எனவே அமராவதி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சற்று மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றுப்பகுதியில் குளிக்கவோ, துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், தங்களது கால்நடைகள் மற்றும் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளும்படியும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமராவதி ஆற்றில் தற்போது இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கு 100000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதினால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு சுமார் 100000டிஎம்சி அளவு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு உபரி நீர் திறந்துவிடப் படுகிறது.


மேலும் அணையில் இருந்து கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், கட்டளைவாய்க்கால், தென்கரை வாய்கால்களுக்கு 1,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மாயனூர் தடுப்பணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.