திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை இரண்டாம் மண்டல அலுவலகத்தில் வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயகணேஷ். இவரிடம் திருப்பூரில் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குணசேகரன் என்பவர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் நிறுவனத்தை மூடிவிட்டு வங்கியில் வழங்குவதற்காக சி-படிவம் சமர்ப்பித்து பணம் பெற தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேலையை விரைந்து முடிக்க, தடையின்மைச் சான்று வழங்க வணிக வரித்துறை அலுவலர் ஜெயகணேஷ் 7 லட்சமும், எழுத்தராகப் பணிபுரிந்து வந்த ரத்னா என்பவர் 2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நெல்லை : 90 வயது பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற பேத்திகள்


இதையடுத்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார், உடனடியாக அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். கேட்ட பணத்தை குணசேகரனிடம் கொடுத்து அனுப்பி வைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதை ஜெயகணேசிடம் , ரத்னாவிடமும் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க | தேனி : தகாத உறவை கண்டித்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR