அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தினகரன் ஆஜராக உத்தரவு
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 19, 20 தேதிகளில் டி.டி.வி.தினகரன் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதால் அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 19, 20-ம் தேதி டிடிவிதினகரன் ஆஜராக உத்தரவு பிறபிக்கபட்டது.