அதிமுக வேறு.. பாஜக வேறு.. உட்கட்சி விவகாரத்தில் யார் தலையிடும் இல்லை -ஜெயக்குமார்
AIADMK News: பாஜக உடன் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமான உறவு தான் இருக்கிறது. திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் இருக்கிறது -ஜெயக்குமார்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் "அதிமுக இணைப்பு, திமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தது என பல விசியங்களை குறித்து பேசினார். குறிப்பாக அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை எனவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது,
இன்றைய தனியார் நாளிதழில் / தினமலர், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதில் பாஜக ஒரு இடத்தை டிடிவி தினகரனுக்கு வழங்குவதாகவும் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, பாஜக சித்தாந்தம் வேறு எங்களுடைய சித்தாந்தம் வேறு. பாஜக கொள்கை வேறு எங்களுடைய கொள்கை வேறு என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்து விட்டார். பா.ஜ.க. தேசிய கட்சி மற்றும் எங்களுடைய தோழமைக் கட்சி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களுடைய கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் இடமில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.
ஒரு கட்சியை களங்கப்படுத்தும் நோக்கி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது என்றும், போதை பொருட்கள் கடத்தல், மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்காதது, பள்ளியில் பிரச்சினைகள், மாணவர்கள் தற்கொலை பிரச்சினைகள் இருப்பதை சுட்டி காட்டி, திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தான் எனவும், இந்தியாவிலேயே பெரிய அளவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சேது சமுத்திர ஊழல் எனக் கூறிய ஜெயக்குமார், பாஜக உடன் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமான உறவு தான் இருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை பரப்புவது நல்லதல்ல என்று கூறினார்.
மேலும் படிக்க: இந்தியாவைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவே - டெல்லியில் பிடிஆர் அதிரடி
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றுக்கு எதிராக போராட்டம், தலைவர்கள் பிறந்த நாள் என் மக்கள் பிரச்சினைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் குரல் கொடுத்து இருக்கிறோம். ஊரக உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்தது தொடர்பாக பேசியவர், பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணம் கொள்ளையடித்தது திமுக ஆட்சி. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக ஆட்சியில் இருக்கிறது எனவும், மலைமுலுங்கி மகா தேவனை பார்த்திருக்கிறீர்களா... என திமுகவை விமர்சனம் செய்த ஜெயக்குமார், ஒரு பிளக்ஸ்க்கு அதிக பணம் திமுகவில் வாங்கப்படுவதாகவும், அதிமுக ஆட்சியில் குறைந்த பணம் தான் ஆனது என்றும், இது மக்களின் பணம். அதை அவர்கள் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆளுநருடனான எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து பேசியவர், ஆளுநர் நிர்வாகத்தின் தலைவர். ஆளுநரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. ஆளுநர் மாளிகை அதற்கான இடமும் இல்லை என்றும், திமுக அரசு தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் இழைத்து மக்களை ஏமாற்றுவதாகவும், ஆளுநரை சந்தித்து திமுக செய்த குற்றங்களை ஆளுநரிடம் தெரிவிக்க தான் சென்றோம் எனவும், திமுகவிற்கு பதவி வெறி தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: உங்கள் முயற்சி வெற்றி பெறாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
திமுக அரசு ஆட்சியில் இருந்த 17 வருடத்தில் மக்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்து தமிழகத்திற்கு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஏதும் செய்யவில்லை. திமுகவோ அதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். செல்வ பெருந்தகை அல்ல. செல்வ பெருந்தொகை. இவர் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் என்றால் ஸ்டாலின் தான் எனவும், ஸ்டாலினால் உருவாக்கப் பட்டவர் தான் செல்வ பெருந்தொகை. அவர் ஸ்டாலினின் ஊது கோல், வளர்ப்பு எனவும், செல்வப் பெருந்தகை எப்படியாவது காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ரஞ்சன் குமார் கூறியதாக சுட்டி காட்டி பேசினார் அமைச்சர் ஜெயக்குமார்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. கண்டிப்பாக எங்கள் தலைமையிலான கூட்டணி தான் வரும். ஓபிஎஸ் உடன் இனிமேல் எப்போதும் இணைய மாட்டோம். இதற்காக பொதுக் குழுவே முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை. இதில் தலைவரும் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.
இது தொடர்பாக மோடி, அமித்ஷா முயற்சி எடுத்தால் இணைவீர்களா என்ற கேள்விக்கு, கட்சி விவகாரத்தில் அவர்கள் தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.
மேலும் படிக்க: நான் அவருக்கு அக்கா; சூர்யா எனக்கு தம்பி - பலே விளக்கம் கொடுத்த சூர்யா, டெய்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR