சென்னை: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது நடிகை புகார் அளித்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) மணிகண்டன் மீது 36 வயது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அடையாறு (Chennai’s Adya Police Station) அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ALSO READ |  தலைமறைவு! முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை தேடும் தமிழக போலீசார்


முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் ராமநாதபுரம் சென்றனர். ஆனால் அங்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீடு பூட்டி உள்ளதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அவரின் உறவினர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தான் தந்த ரூ. 5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதால், தன்னை மிரட்டுவதாகவும், தன்னிடம் மேலும் பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுபோல் பல மோசடிகளை மலேசியாவில் நடிகை செய்ததாகவும்" என தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.


ALSO READ |  சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR