சென்னையில் திமுகவின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கு.க.செல்வம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த கு.க.செல்வம். 2016 ஆம் ஆண்டு சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் இருக்கும் தொகுதி அது. கட்சி தலைமையின் அபிமானம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த தொகுதியில் போட்டியிட திமுக தலைமை அனுமதிக்கும். அந்த தொகுதியில் இருந்து 15வது சட்டமன்றத்துக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!


ஆனால் 2020 ஆம் ஆண்டுகளில் கட்சி தலைமை மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. ஸ்டாலினின் நெருக்கத்துக்குரியவராக இருந்தாலும் உட்கட்சி விவகாரம் காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கினார். திடீரென பாஜகவின் அகில இந்திய தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் செய்தார். இது குறித்து திமுக தலைமை விளக்கம் கேட்டபோதும், அதற்கு எந்த பதிலும் கு.க செல்வம் தரப்பில் கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுக்கப்பட்டதுடன், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.


பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்த்த அவருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தலைமை நிலைய அலுவலக செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 2 மாதங்களாக கோமாவில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று காலை அவர் காலமானார். அவரது உடலுக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். 


கு.க.செல்வம் 1997 ஆம் ஆண்டு வரை அதிமுகவில் இருந்தார். அதன்பிறகு தான் அக்கட்சி மற்றும் ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவுக்கு வந்தார். வடபழனியில் வசித்து வந்த கு.க.செல்வம், அப்பகுதியில் இருக்கும் அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். வடபழனியில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியிலும் இம்மன்றம் செயல்படுகிறது.


மேலும் படிக்க | காவு வாங்கும் ஈசிஆர் கடற்கரை... 4 நாட்களில் 10 பேர் பலி - காரணம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ