கலைஞரின் பேனாவால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார் கவலை
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" எனும் பாடலை பாடியும் தொண்டர்களை பாடவைத்தும் உற்சாகமூட்டினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் கோயபலஸ் அரசகாவே இந்த அரசு செயல்படுகிறது.
தமிழகம் முழுவதும் கழக அமைப்பு சார்ந்த மாவட்டங்களில் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இவற்றை காதுகொடுத்து கேட்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. கலைஞர் நினைவிடத்தில் பேனா அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி கொடுத்து இருந்தாலும் , மீனவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
அறிவாலயத்தில் பேனா சிலை வைக்க வேண்டியது தானே ?சென்னையின் அடையாளமே பறிபோகும் நிலை உருவாகும். எதிர்க்கட்சி எனும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதி புகழ்பாடும் அரசகாவே இந்த அரசு உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்ற பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. ஓ.பி.எஸ் கோஷ்டியால் கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த முடியுமா? அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்” என்றார்.
மேலும் படிக்க | பிராந்திய மொழிகளுக்கு இந்தி போட்டி இல்லையா? அமித்ஷாவுக்கு பதில் கொடுக்கும் கி வீரமணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ