மதுரை: ஜனவரி 12ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை (New Year) முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது பிரதமரின் வருகை பற்றி கருத்து தெரிவித்தார்.


செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஒமிக்ரான் கொரோனோ தொற்று நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசும் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


ALSO READ | ஆவினில் ஊழலுக்கு ராஜேந்திர பாலாஜி தான் முழு காரணம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்


மேலும், தமிழக மக்களுக்கு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்பதை திமுக அரசு செயல்படுத்தும் என நம்புவதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்றார். தற்போது மதுரை மாநகராட்சி கிராமம் போல வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது. அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.


மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும், அந்த நிதியை முதல்வர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், ஆளும் கட்சி , எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் எனவும்


வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் (PM Modi) பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் மோடி, உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றிவருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐநா வரை எடுத்துசென்று பேசிவருகிறார் பிரதமர் மோடி என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.


பிரதமர் மோடியின் மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார். மேலும் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்தவிட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார்.


ALSO READ | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR