விஜயபாஸ்கர் விமர்சனம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, " ஏற்கனவே தமிழகத்தில் நோய் தொற்று பரவுவது குறித்து ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் தமிழக அரசும் சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு காய்ச்சல் தொடர்பான உண்மையான தரவுகளை மூடி மறைக்கிறது.


பரவும் காய்ச்சல்


தமிழகத்தில் காய்ச்சல்  பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஒரே  நாளில்238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 768 கொரோனா பாதிப்பை கேரளா அரசு உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது. என்ன மாதிரியான  காய்ச்சல் என்பததை கண்டறிய தமிழக அரசு சோதனைகளை மேற்கொள்ளவில்லை. அமெரிக்காவிலும் 12 சதவீதம் கொரோனா பாதிப்பு உள்ளது. சிங்கப்பூர், மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் எந்த மாதிரியாக காய்ச்சல் என்பதை கண்டறிய கொரோனா சோதனையை அரசு நடத்த  வேண்டும். 


மேலும் படிக்க | திராவிடத்துக்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு


சோதனையை தீவிரப்படுத்துங்கள்


எந்த மாதிரியான காய்ச்சல் பரவுகிறது என்பதை இந்த அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஒமிக்ரைன் வைரஸின் புதிய வகையான் JN1 தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதனை அரசு கொண்டு கொள்ளாமல் விட்டால் பெரிய விளைவுகளை ஏற்படுக்கும். அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வரும் நிலையில் விமான நிலையங்களில் சோதனையை தமிழக அரசு தீவிர படுத்த வேண்டும்.


ஐசியூவில் சுகாதாரத்துறை


சுகாதாரத்துறை ICU -வில் தான் உள்ளது. அதை நார்மல் வார்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அரசு கூடுதல் கவனம் செலுத்தி நோய் தொற்று பாதிப்புகளை தடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று சர்வதேச விமான நிலையங்களில் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்.


அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


பொதுமக்களை எந்த விதமான பதட்டத்திற்கும் உள்ளாக்காமல் இது போன்ற செயல்களில் அரசு ஈடுபட வேண்டும். உண்மையான நிலவரத்தை அரசு வெளிப்படை தன்மையோடு அறிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று மருத்துவமனைகளிலும் பேராசிட்டமால் சீராய்டு உள்ளிட்ட மருந்துகளை அதிகம் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | கொடநாடு கொலை வழக்கு... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' - இபிஎஸ் ஆஜராக உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ