போலீசார் கட்டுப்பாட்டில் ஜெ., வாழ்ந்த வேதா நிலையம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். முன்னால் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதைக்குறித்து அரசு இதழில் அறிக்கை ஒன்றையும் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு அவரது அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வாரிசு என்ற முறையில் எங்களது கருத்தை கேட்காமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்கும் முடிவுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
அதேபோல, தமிழக அரசு முடிவுக்கு தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். வீடு எங்களுக்கே சொந்தம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர். போயஸ் கார்டனை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.