இன்று ஆளுநரை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்
தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக உறுப்பினர்களை ஜனநாயக மரபுக்கு மாறாக வெளியேற்றி இன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றினர். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் வெல்லும் இது சரித்திரம் என்றார் ஓ. பன்னீர்செல்வம். தர்மம் வெல்வதற்கு காலம் உள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினர். எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள்,
எம்எல்ஏக்கள் அவர்களை சந்தித்து விட்டு வாக்களிக்கட்டும் என்று கோரினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை. திமுக சட்டசபை உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.
ஜனநாயகத்துக்கு விரோதமாக, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஜனநாயகத்துக்கு விரோதமாக, எம்.எல்.ஏ.,க் களை அடைத்து வைத்து, ஓட்டெடுப்பு நடத்தியது செல்லாது என்றார்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.