ஆன்மீகம் என்ற பெயரில் சாதி மற்றும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மணியன் கைது
RBVS Manian Arrested: அம்பேத்கர், வள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை தியாகராயர் நகரில் இன்று அதிகாலை கைது.
Tamil Nadu News: திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர் குறித்து ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய வீடியோ வைரல் ஆனதை அடுத்து, சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் தமிழக போலீசார் கைது செய்தனர். அவர் மீது 153, 153A(1)(a), 505(1)(b), 505(2) IPC மற்றும் Section 3(1)(r), 3(1)(u) மற்றும் 3(1)(v) of the SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த திங்களன்று ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் சென்னையில் நடந்த பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பொழுது அவர், திருவள்ளுவர், அம்பேத்கர் பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியிருந்தார். மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தேவர், பள்ளர் சமூகம், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பலரை பற்றி மிகவும் தவறாக பேசியிருந்தார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. அதேநேரத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் ஆர்.பி.வி.எஸ் மணியனை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியது...
ராமனை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்த நாட்டில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள்!
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பொறந்தவன் எல்லாம் பாவிங்கடா. 1967 க்கு பிறகு தமிழ்நாட்டில் பிறந்த அத்தனைப்பேரும் பாவிகள்..மகா பாவிகள்.
இராமன் தசரதனுக்கு பிறந்தான். அவருக்கு பிறந்த நாள் இருக்கு. ஜாதகம் இருக்கு. ஆதாரமும் இருக்கு. ஆனால் திருவள்ளுவர் யாருக்கு பிறந்தார். ஆதாரம் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ