மாமன்னன் திரையிட்டால் திரையரங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - பார்வர்டு பிளாக் பகிரங்க எச்சரிக்கை
மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்துவோம் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி வெற்றி திரையரங்கத்தில் மாமன்னன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்க மேலாளரிடம் பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு அளித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன் இந்தத் திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் எனக்கு நிறைய வலியை ஏற்படுத்தியது. படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் திரைப்படம் என்று அவர் பேசியிருந்தார். நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் அகில இந்திய பார்வர்டு பிளாக் , மாவட்ட இணை செயலாளர் எம்பிஎஸ் முருகன் தலைமையில மாமன்னன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்கும் மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் படிக்க | ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை: மா.சுப்பிரமணியன்
மேலும் இந்தத் திரைப்படத்தால் ஜாதி மோதல்கள் உண்டாகும் நிலை இருப்பதால் படத்தை திரையிடக்கூடாது என்றும், எச்சரிக்கையை மீறி படம் திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடைபெறலாம் எனவும் எச்சரித்தனர். இதற்கு முன்பே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிராக தேனியில் பல்வேறு பகுதிகளில் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது திரையரங்கம் மீது தாக்குதல் நடைபெறும் என கூறியதால் கூடுதல் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, மாமன்னன் திரைப்படத்திற்கு எதிரான தாக்குதல் அடித்து உடைப்பது என்றில்லாமல் சட்டரீதியாக இருக்கும். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை காட்டி இருப்பார் அந்த மக்களின் வலியை உணர்ந்துள்ளோம். அந்த வலியில் இருந்து அந்த ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வெளிவர வேண்டும் என்பதற்காக முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
அதே நேரத்தில் கொடுக்கப்பட்ட சமூக மக்களின் வலியை காண்பிப்பது வழியாக, இன்னொரு சமுதாய மக்களை எதிரியாக காட்டுவது இரண்டு சமூகத்திற்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கும். 1989 ஆம் ஆண்டு கலவரம் போல் மீண்டும் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்ட நினைக்கிறாரா மாரி செல்வராஜ்?. கலவரங்களை தூண்டும் மாமன்னன் போன்ற திரைப்படங்களை திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சட்டபடியாக எதிர்ப்பு தெரிவிப்போம்.
மாமன்னன் திரைப்படத்திற்கு எதிரான தாக்குதல் அடித்து உடைப்பது என்றில்லாமல் சட்டரீதியாக இருக்கும். ஜனநாயக ரீதியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் இருக்கிறார் என்று மாரி செல்வராஜ் நினைக்கிறார். இது போன்ற பிரச்னைக்குரிய விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் நேர்த்தியாக கையாள வேண்டும். இல்லையேல் அவரது அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 30 பாஜகவினர் கைது... அதில் 8 பேர் உடனே சிறையில் அடைப்பு - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ