சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டம். இந்த திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று திரும்புவதற்காக இலவச சைக்கிள் சேவை திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளது.


அதன்படி முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.


சைக்கிள்களை எடுத்து செல்லும் பயணிகள் எஸ்எம்எஸ் மூலன் தனது அடையாள அட்டை நகல் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு விடும். எனவே பயணிகள் சைக்கிளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் பட்சத்தில் அவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.