இரண்டு பிரியாணி வாங்கினால் அரைக்கிலோ தக்காளி இலவசம் என அறிவித்துள்ள ஆம்பூர் பிரியாணி, ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என அதிரடியான ஆஃபர்களை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை வெளுத்து வாங்குவதால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், அதிர்ச்சியில் இருக்கும் மக்கள், தக்காளி இல்லாமல் குழப்பு வைப்பது எப்படி? என கூகுளில் தேடி வருகின்றனர். கூகுள் கீ வேர்டு லிஸ்டில், தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என்பது முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. அந்தளவுக்கு தக்காளி விலை மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. ஆனால், ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று ‘ நாங்க வேற மாதிரி’ என்ற ஸ்டைலில் யோசித்து விளம்பரம் வெளியிட்டுள்ளனர். 


பிரியாணியை (Biriyani) மார்க்கெட்டிங் செய்ய, தக்காளி விலையேற்றத்தை தங்களுக்காக பயன்படுத்தி அசத்தலான ஆஃபர்களை அறிவித்துள்ளனர். அதாவது, இரண்டு பிரியாணி வாங்கினால் அரைக்கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என அதிரடியான விளம்பரத்தைக் கொடுத்துள்ளனர். 



ALSO READ: தக்காளி சட்னிக்கு டாடா, இனி புதினா சட்னி தான்- நெட்டிசன்கள் கலகல


இந்த ஆஃபர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள ஆம்பூர் பிரயாணிக் கடையில் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடை உரிமையாளரின் இந்த வித்தியாசமான விளம்பரம், வாடிக்கையாளர்களையும், நெட்டிசன்களையும் (Netizens) வெகுவாக கவர்ந்துள்ளது. இது குறித்து பேசிய கடை உரிமையாளர், தக்காளி விலை உயர்வு மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதை உணர முடிவதாக தெரிவித்தார். பெட்ரோல், தங்கத்தைப் போல் தக்காளியும் நாளுக்கு நாள் உயர்வது, சாமானியர்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்த அவர், இதில் அரசு தலையிட வேண்டும் எனக் கூறினார். அரசு தலையிட்டால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய கடை உரிமையாளர், மாடித் தோட்டம் செய்வது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியம் எனக் கூறிய அவர், இதன்மூலம் தங்களுக்கு தேவையானதை தாங்களே விளைவித்துக் கொள்ள முடியும் எனக் கூறினார். இதுபோன்ற விலையேற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறினார். 


இப்போதைக்கு தக்காளியின் (Tomato) விலையேற்றம் மட்டுமே அனைத்து தளங்களிலும் பேசு பொருளாக உள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் தக்காளி விலை உயர்வால் தக்காளி சட்னிக்கு என்டு கார்டு போட்டுவிட்டு, பொதினா சட்னிக்கு மாறியுள்ளனர். வீடுகளில் தக்காளி இல்லாமலேயே சாம்பார் வைக்கத் தொடங்கியுள்ளனர். 


ALSO READ: Tomato: தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR