தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது. இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதை தொடர்ந்து, தமிழக போக்குவரத்து துறை பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்துஇலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 50% சத்தவிகித கட்டண சலுகைகளுடன் பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.