நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்
நாளை முதல் மாணவ, மாணவிகள் பாஸ் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கபடும் நிலையில் சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது.,
தமிழகத்தில் (Tamil Nadu) பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவியர் (TN Schools) சீருடையுடனோ, அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்தோ பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ நிலையங்களில் பயிலும், மாணவி, மாணவியர்கள் அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அதேசமயம் கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும் வரை, மாணவர்கள், தங்கள் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
* கொரோனாவின் தாக்கம் முடியும்வரை, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.
* இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற வேண்டும். இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்.
* முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பொறியியல் படிப்புகளுக்கும், ஒவ்வொருஆண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும்.
* உயர்கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்படவேண்டும்.
READ ALSO | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR