வேலூர் மாவட்டம் கீழ்வடுங்கன்குட்டை பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சாலை ஓரங்களில் 35-க்கு மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர், நரிக்குறவர்களை அங்கிருந்து காலி செய்ய வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, ஒரே நாளில் காவல்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து இவர்களின் குடிசைகளை அகற்றியுள்ளனர். 


பின்னர், ராஜா என்பவர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கீழ் வடுவங்கன்குட்டையில் உள்ள குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.


அடிப்படை வசதி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில், அரசின் சலுகைகள் எதுவுமே தங்களுக்கு கிடைப்பதில்லை என வேதனையுடன் கூறும் நரிக்குறவர்கள், அரசு தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கினால், அது தங்களின் உரிமைகளைப் பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கின்றனர்.