ரயில் நிலையங்களில் இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு ‘சார்ட்’ ஒட்டப்படவில்லை. இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இதற்கான சோதனை முயற்சி சென்னை சென்டிரல், டெல்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், அவுரா, சீல்தா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது.


இந்தநிலையில் இந்தியாவில் உள்ள ‘ஏ1’, ‘ஏ’ மற்றும் ‘பி’ கிரேடு பெற்ற ரயில் நிலையங்களில் ரயில்களில் முன்பதிவு ‘சார்ட்’ ஒட்டும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.


இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 1 முதல் அமல் படுத்தப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்கு தொடரப்படும். இதற்காக அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


இந்த புதிய திட்டம் குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தற்போது பெருவாரியான டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலமே எடுக்கப்படுகின்றன. எனவே அந்த பயணிகளுக்கு முறையான தகவல்கள் அடிக்கடி SMS மூலம் சேரும். கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுப்பவர்களும் தற்போது செல்போனிலேயே PNR நிலையை அறிந்துகொள்கின்றனர். இதன்மூலம் காகித பயன்பாடு பெருமளவில் குறையும்”, என்றனர்.