இன்று முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜாக்டோ-ஜியோ நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ-ஜியோ மற்றும் ஜாக்டோ அமைப்புகள் அறிவித்தன.
ஆனால் 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்த புதிய ஜாக்டோ-ஜியோ அணியினர் வேலை நிறுத்தத்தில் இன்று முதல் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மொத்தமுள்ள 27 சங்கங்களில் 6 சங்கங்கள் இந்தக் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்பு. மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டமும், நாளை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளன.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வருடன் நேற்று அந்த கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சென்னையில் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அந்த கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.