ரஃபேல் போர்விமான ஊழல் விவகாரத்தில் உண்மை வெளிக்கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என MK ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். 


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... "இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் 'டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு தனிப்பட்டமுறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் "இந்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது.


இதனையடுத்து மத்திய அரசு வெளிப்படையாக நடந்துக்கொள்ள வேண்டும், ரஃபேல் போர்விமான விவகாரத்தில் மறைந்துள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"வெளிப்படைத்தன்மை, ஊழல் அற்ற இந்தியா என பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேர்காணல் ரபோல் விவாகத்தில் மர்மம் நிலவுவதை வெளிக்காட்டுகிறது. பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும், ரஃபேல் விவகாரத்தில் மறைந்துள்ள உண்மையினை கொண்டுவர முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்" என பதிவிட்டுள்ளார்!