சென்னை: மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாவலின் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகள், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.


 


READ | கொரோனா பீதி: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 நள்ளிரவு வரை முழு ஊரடங்கு


 


இந்த 4 மாவட்டங்களிலும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 மற்றும் 28ம் ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதி காலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.
* முழு ஊரடங்கில் மருத்துவ பணிகள் மற்றும் சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* அவசர தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் எல்லையில் மாநில அரசுத்துறைகள் 33% பணியாளர்களுடன் தொடர்ந்த செயல்படும்.
* சென்னை பெருநகர காவல் எல்லையில் மத்திய அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கும்.
* சென்னை காவல் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு வர தேவையில்லை.
* ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மத்திய 2 மணி வரை மட்டுமே செய்லபடும்.
* காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
* அத்தியாவசிய பொருள் வாங்க பொதுமக்கள் வாகனங்களில் வரக்கூடாது. நடந்து சென்றே பொருட்கள் வாங்க வேண்டும்.
* உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி.
* டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.
* உரிய அனுமதி பெற்று உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
* சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்.
* பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றும் கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை.
*  பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
* அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்.
* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.
* மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.


சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. 


 


READ | டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்


 


இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் (Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.