சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 7 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலம் இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனால் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, இ- பாஸ் (E-Pass), பொது போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்தார் எனக் கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு!! எதற்கு அனுமதி? எதற்கு இல்லை? விவரம்


இந்தநிலையில், நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு (Full Lockdown) கடைபிடிக்கப்படும். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாளை மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் தமிழகம் முழுவதும் மளிகை, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும், பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும். 


தமிழ்நாடு ஊரடங்கு வழிகாட்டுதல்களின்படி, ஆகஸ்ட் 31 வரை மாநிலத்தில் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (2, 9, 16, 23, 30), "முழுமையான ஊரடங்கு" கடைபிடிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.