ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை பாதுகாக்க உலக நாடுகள் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'மண் காப்போம்' இயக்கத்தை தொடங்கியுள்ளார்.மேலும், இது குறித்து உலக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தையும் அவர்  மேற்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 21ஆம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சென்றார். அதனை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பயணத்தை மேற்கொண்டார். உலகம் முழுவதும் 27 நாடுகளில் பயணிக்கவுள்ள அவர், 30 ஆயிரம் கி.மீ., பயணித்து தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.


மேலும் படிக்க | எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானை நோக்கி விரல்களை நீட்டுவீர்கள்! மத்திய அரசை சாடிய சஞ்சய் ராவத்


இந்நிலையில், சத்குருவின் இந்த முயற்சிக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்கள் ஆதவரை வழங்கி வருகிறது. அந்த வகையில், உலக அளவில் செல்வாக்கு மிகுந்த சர்வதேச அரசு சாரா இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான உலக முஸ்லீம் லீக் தனது ஆதரவை வழங்கியுள்ளது.


முன்னதாக சவுதி அரேபியா சென்ற சத்குருவை உலக முஸ்லீம் லீக் இயக்கத்தின் பொதுச்செயலார் டாக்டர் அல்-இசா வரவேற்றார். இது குறித்து சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களில் முழு ஆதரவு இருப்பதாகவும், சத்குருவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள சத்குரு, சாதி, மதன், இனம், மொழி என்பதையெல்லாம் கடந்து இயற்கை மண் வளத்தை காப்பதுதான் அவசியம் என குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்துக்கும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Wheat Export Ban: இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR