கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நான்கு மாவட்டத்திற்கு விடுமுறையளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.


இந்நிலையில், இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. நாளை (வியாழக்கிழமை) மதியம் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ளது. குறிப்பாக கடலூர மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 


கஜா புயல் நாளை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், நாகை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். நாளை அப்பகுதியில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ராமநாதபுரம், திருவாரூர், புதுகோட்டை,  காரைக்கால் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.