நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதினை அடுத்து, தற்போது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் முதல் நேற்று (டிச., 31) வரை சந்தித்து வந்தார்.


இந்த சந்திப்பானது சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல்  பிரவேசத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவர் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளரும் ஆவார். இவருடைய திடீர் சந்திப்பு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை உள்ள ரஜினிகாந்த்தின் போயஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று காலை  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.


இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன்:_  ரஜினிகாந்த் விரைவில் தனது அரசியல் திட்டங்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவார். மேலும் சொல்ல எதுவும் இல்லை 'என்றார்.


இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் விரைவில் தனது அரசியல் திட்டங்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்கப்படுகிறது.